ஹிஸ்புல்லாஹ், முஜிபுர் ரஹ்மான், பிள்ளையான் ஆணைக்குழுவில்

Pillayan-Hizbullah-Mujibur Rahman to Police Unit of the PCoI of the Easter Sunday Attack

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் பிள்ளையான் என அழைக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர் சிசநேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோர் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னிலையாகியுள்ளனர்.

குறித்த ஆணைக்குழுவின் அழைப்பிற்கு அமைய, கடந்த வியாழக்கிழமை (03) சிறை அதிகாரிகளின் பாதுகாப்பிற்கு மத்தியில், ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னிலையான சிசநேசத்துரை சந்திரகாந்தன், சுமார் 5 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

இதேவேளை, ஹிஸ்புல்லாஹ் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் முதன் முறையாக அவ்வாணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னிலையாகியுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னிலையாகி 6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட 06 பேர் இன்று (07) குறித்த ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வெகுசன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவும் இன்று குறித்த பொலிஸ் பிரிவுக்கு வரவழைக்கப்பட்டுள்ளார்.

Mon, 09/07/2020 - 11:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை