வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

பாலமுனை மஹாசினுல் உலும் இஸ்லாமிய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதன் போது மாணவர்களுக்கிடையிலான , சமநிலை ஓட்டம், மரதன் ஓட்டம், உயரம் பாய்தல், தடைதாண்டி ஓடல், கரப்பந்தாட்டம், கிரிக்கெட், உடற்பயிற்சி கண்காட்சி மற்றும் மெய்வல்லுநர் உட்பட பல்வேறு போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றன.

கல்லூரியின் அதிபர் அல்--ஹாபிழ் ஏ.எல்.சாஜித் ஹுஸையின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாலமுனை ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவர் யு.எல்.அப்துல் லத்திப், ஓய்வுபெற்ற ஆசிரியரும் கல்லூரியின் போசகருமான மௌலவி எம்.எல்.ஆதம்லெவ்வை, பாலமுனை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவரும் மஹாசினுல் உலூம் பெண்கள் கல்லூரியின் அதிபருமான அல்-ஹாபிழ் ரீ. நிஸ்தார், உட்பட கல்லூரியின் நிருவாகிகள் ஆகியோர் அதிதிகளாகவும் கலந்து கொண்டு மாணவர்களுக்கான வெற்றிக் கிண்ணம் மற்றும் பரிசில்களை வழங்கி வைத்தனர். இதேவேளை தாறுல் பலாஹ் இல்லம். (95) புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தையும். தாறுல் ஹிக்மா இல்லம் (83) புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும். தாறுஸ்ஸலாம் இல்லம் (80) புள்ளிகளைப் பெற்று. மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டு இவ்வாண்டிற்கான 2020 கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி சம்பியனாக தாறுல் பலாஹ் இல்லம் தனதாக்கி கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

பாலமுனை கிழக்கு தினகரன் நிருபர்

Thu, 09/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை