பலஸ்தீனத்தில் தேர்தல் நடத்த பத்தா, ஹமாஸ் உடன்படிக்கை

பலஸ்தீனத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின் தேர்தலை நடத்துவதற்கு இரு பிரதான தரப்புகளான பத்தா மற்றும் ஹமாஸ் அமைப்புகள் இணங்கியுள்ளன.

பத்தாவின் பலஸ்தீன அதிகாரசபை தலைவர் மஹ்மூத் அப்பாஸ் மற்றும் ஹமாஸ் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மைல் ஹனியா இடையே ஏற்பட்டிருக்கும் உடன்பாட்டில் அடுத்த ஆறு மாதங்களில் தேர்தலுக்கான திகதி நிர்ணயிக்கப்படவுள்ளது.

“முதலில் பாராளுமன்ற தேர்தலையும் தொடர்ந்து பலஸ்தீன அதிகாரசபையின் ஜனாதிபதி தேர்தலையும் இறுதியில் பலஸ்தீன விடுதலை அமைப்பின் மத்திய குழுவையும் அமைக்க நாம் இணங்கியுள்ளோம்” என்று சிரேஷ்ட பத்தா அதிகாரியான ஜிப்ரில் ரஜூப் தெரிவித்தார்.

கடைசியாக 2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஹமாஸ் எதிர்பாராத பெரு வெற்றியை பெற்றது.

துருக்கியில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்த உடன்படிக்கை எட்டப்பட்டதாக ஹமாஸ் மூத்த அதிகாரி சலேஹ் அல் அரூரி தெரிவித்துள்ளார்.

Sat, 09/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை