இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் பிரதி தலைவராக மனாப் தெரிவு

கல்முனை சனிமெளண்ட் விளையாட்டு கழகத்தின் செயலாளருக்கு அண்மையில் நடைபெற்ற இலங்கை உதைபந்தாட்ட நிர்வாகக் குழுக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் செயலாளரும், கல்முனை மாநகர சபை உறுப்பினருமான எம்.ஐ.எம். அப்துல் மனாப் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் பிரதித்தலைவர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்

மனாப் இவ் உயர் பதவிக்கு தெரிவானது கல்முனை மண்ணுக்கு அவர் பெற்றுத்தந்த பெருமை என்றுதான் கூற வேண்டும்.

அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கம் சார்பாகவும், வீரர்கள் சார்பாகவும் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.

இவர் தனது சிறுவயதிலிருந்து இன்று வரை விளையாட்டுத்துறையில் மிகவும் ஆர்வம் கொண்ட வீரர் அதிலும் அவர் உதைபந்தாட்ட போட்டிகளில் விளையாடி பல சாதனைகளை படைத்து கல்முனை ஏட்டில் பதியப்படவேண்டிய பல சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.

அப்துல் மனாப் தான் ஒரு உதைபந்தாட்ட வீரனாக இருந்தாலும் சகல விளையாட்டு வீரர்களும் விளையாட்டு துறையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பது அவரின் இலட்சியம் அதற்காக தன்னால் முடிந்த உதவிகளை விளையாட்டு கழகங்களுக்கு செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது

விளையாட்டு திறமைகள் என்பது கல்முனை மண் மறக்க முடியாத சேவைக்கு கிடைத்த பதவியாகவே உதைபந்தாட்ட பிரியர்கள் பார்க்கின்றனர்.

 யூ.கே. காலித்தீன்

Thu, 09/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை