குடிநீர் போத்தல் வர்த்தகர் சீனாவின் செல்வந்தரானார்

அலிபாபா நிறுவனர் ஜக் மாவை பின்தள்ளி சீனாவின் பெரும் செல்வந்தராக குடிநீர் போத்தல் வர்த்தகரான சொங் சன்சான் இடம்பெற்றுள்ளார்.

சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் 1996 ஆம் ஆண்டு நொங்பு ஸ்பிரிங் என்ற குடிநீர் போத்தல் நிறுவனத்தை சன்சான் நிறுவினார். புளும்பேர்க்கின் செல்வந்தர் பட்டியலில் அவர் 58.7 பில்லியன் டொலர் செல்வத்துடன் முன்னிலை பெற்றுள்ளார். இதன்படி சொங் இந்தியாவின் முகேஷ் அம்பானிக்கு அடுத்து ஆசியாவின் இரண்டாவது செல்வந்தராகவும் பதிவாகியுள்ளார். உலகின் 500 செல்வந்தர்கள் பட்டியலில் அவர் தற்போது 17ஆவது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீனாவின் புதிய செல்வந்தர்கள் பட்டியலில் தொலைத்தொடர்புத் துறையைச் சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ளனர். எனினும் சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான பதற்றத்தினால் ஹுவாவி, டிக்டொக் மற்றும் விசாட் போன்ற நிறுவனங்களின் மதிப்பு வீழ்ச்சி கண்டுள்ளது.

இதனால் சீனாவின் உணவு மற்றும் மளிகை பொருட்களின் வர்த்தகம் வளர்ச்சி கண்டுள்ளது.

Fri, 09/25/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை