தாய்லாந்தில் முடியாட்சி சீர்திருத்த சின்னம் மாயம்

“தாய்லாந்து மன்னருக்கு அன்றி மக்களுக்கு உரியது” என்று குறிப்பிடப்பட்ட அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் வைக்கப்பட்ட உலோகச் சின்னம் அகற்றப்பட்டுள்ளது.

நாட்டின் முடியாட்சிக்கு எதிரான வலுவான எதிர்ப்பை வெளியிடும் வகையிலேயே கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த உலோகச் சின்னம் பதிக்கப்பட்டது.

இதன்போது முன்னெப்போது இல்லாத வகையில் மன்னருக்கான அதிகாரங்களை சீர்திருத்தும்படியும் பிரதமரை பதவி விலகும்படியும் பெரும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

நேற்று காணாமல்போயிருக்கும் இந்த உலோகச் சின்னம் பற்றி விசாரணை நடத்தப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். எனினும் இந்தச் சின்னத்தை பதித்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று பாங்கொக் பிரதி பொலிஸ்மா அதிபர் பியா ட்விசாய் எச்சரித்துள்ளார்.

மன்னர் அரண்மனைக்கு அருகில் இருக்கு வரலாற்று முக்கியம் வாய்ந்த சனம் லுவாங் தளத்திலேயே இந்த உலோகச் சின்னம் பதிக்கப்பட்டது.

1930களில் முழுமையான முடியாட்சி முறை முடிவுக்கு வந்ததை அடையாளப் படுத்தும் வகையிலேயே இந்த உலோகச் சின்னம் பதிக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர். இது தொடர்பான முந்தைய உலோகச் சின்னம் 2017 ஆம் ஆண்டு காணாமல்போனது.

கடந்த 2 நாட்களாகப் பல்லாயிரக்கணக்கானோர் தாய்லந்தின் மன்னராட்சியில் சீர்திருத்தம் கோரி ஆர்ப்பாட்டம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

Tue, 09/22/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை