ஒருசில நாட்களில் மற்றுமொரு அரபு நாடு இஸ்ரேலுடன் உறவு

அடுத்த ஒருசில நாட்களில் மற்றொரு அரபு நாடு இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவை ஏற்படுத்தும் என்று அமெரிக்க மூத்த இராஜதந்திரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

“மேலும் பல நாடுகளை இணைப்பதுவே எமது திட்டம். மிக விரைவில் இது பற்றி மேலும் அறிவிப்பை நாம் வெளியிடுவோம். மற்றொன்று (நாடு) அடுத்த ஒரு நாள் அல்லது இரண்டு நாளில் அறிவிக்கப்படும்” என்று ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் கெல்லி கிராப்ட், அல் அரபியா இணையதளத்திற்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார். “அடுத்த நாடுகளும் இதனைப் பின்பற்றும் என்று எனக்குத் தெரியும்” என்றும் அவர் கூறினார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் ஐக்கிய அரபு இராச்சியம் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியதோடு பஹ்ரைனும் அதனைப் பின்பற்றி இஸ்ரேலுடன் உடன்பாட்டுக்கு வந்தது.

இந்நிலையில் மொரோக்கோ, ஓமான் மற்றும் சூடான் நாடுகளும் இஸ்ரேலுடன் உறவை ஏற்படுத்துவது குறித்து ஆர்வம் காட்டுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Fri, 09/25/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை