திருத்துவக் கல்லூரி, சென் பீட்டர்ஸ் கல்லூரி பழைய மாணவர் அணிகள் இணைச் சம்பியன்

திருத்துவக் கல்லூரி பழைய மாணவர் சவால் கேடயத்திற்காக நடை பெற்ற உதைப் பந்தாட்டப் போட்டியில் திருத்துவக் கல்லூரி பழைய மாணவர் அணியும், சென் பீட்டர்ஸ் பழைய மாணவர் அணியும் இணைச் சம்பியனகளாயின. கண்டி பல்லேகலையில் இடம் பெற்ற இப் போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் வீதம் போட்டு 1-1 என்ற நிலையில் போட்டியை சமநிலையில் முடித்தன. இதன் காரணமாக இரு அணிகளும் இணைச் செம்பியன்களாக அறிவிக்கப்பட்டன.

சென் பீட்டர்ஸ் பழைய மாணவர் அணித் தலைவர் எம். நசீம் மற்றும் திருத்துவக் கல்லூரி பழையமாணவர் அணித்தலைவர் சனூஜ் சிரந் ஆகியோர் இணைந்து கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டனர்.

அக்குறணை குறூப் நிருபர்

Thu, 09/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை