இனவாத உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்திய சஜித் அணி

தே.ஐ.மு தலைவர் அஸாத் சாலி கண்டனம்

தேசிய காங்கிரஸ் தலைவரின் பாராளுமன்ற உடை தொடர்பில், சந்தர்ப்பம் பார்த்து கூச்சலிட்டதால், சிலரின் இனவாத உள்ளக் கிடக்கைகளை உலகம் அறிந்துகொள்ள முடிந்துள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல்மாகாண முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி தெரிவித்தார்.

பாராளுமன்ற சம்பிரதாயங்களை மீறி, ஆடையணிந்து வந்ததாக தேசிய காங்கிரஸ் தலைவர் மீது எதிர்க்கணைகள் தொடுத்த ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள், சபாநாயகரின் அனுமதியுடன் மீண்டும் அதே ஆடையுடன் அதாஉல்லா பாராளுமன்றம் வந்து அமர்ந்ததில், பல படிப்பினைகள் உள்ளதையும் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

"தேசிய காங்கிரஸ் தலைவரின் ஆடையைப் பார்த்து "அல்கைதா, ஐ.எஸ்.ஐ.எஸ், இஸ்லாமிய அடிப்படைவாதி" எனக் கூச்சலிட்ட ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள், அரசியல் நோக்கிலே செயற்பட்டுள்ளனர். அதாஉல்லாவின் ஆடையில் அடிப்படைவாதம், பயங்கரவாதச் சாயல் இருந்திருந்தால், மீண்டும் அந்த ஆடையுடன் சபைக்கு வருவதற்கு சபாநாயகரின் அனுமதி கிடைத்திருக்காது. நடைமுறையில் சில தவறுகள் இருந்ததாலே அவர் வெளியேற்றப்பட்டு, மீண்டும் சபைக்குள் அனுமதிக்கப்பட்டார். இதைக் கூடப் பொறுத்துக்கொள்ளும் மனவளர்ச்சி சஜித் பிரேமதாச தலைமை தாங்கும் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்களுக்கு இல்லாமல் போனமை கவலையளிக்கிறது.

ஒரு தவறைக் கண்டிப்பதற்கு எம்.பிக்களுக்கு உரிமை உள்ளதுதான். எனினும், எதிர்க்கட்சி எம்.பிக்கள், அதாஉல்லாவுக்கு எதிராகப் பிரயோகித்த சொற்கணைகள், வங்குரோத்து அரசியலுக்கு வயிறு வளர்க்கும் முயற்சியாகவே நான் பார்க்கிறேன்.

 

 

 

Thu, 09/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை