எலிசபத் ராணியின் அந்தஸ்தை நீக்குவதற்கு பார்படோஸ் முடிவு

எலிசபத் மகாராணியை நாட்டின் அரச தலைவர் அந்தஸ்தில் இருந்து நீக்கி ஒரு குடியரசாக மாறும் விருப்பத்தை பார்படோஸ் வெளியிட்டுள்ளது.  

“கடந்தகால எமது காலனித்துவத்தில் இருந்து முழுமையாக வெளியேறும் காலம் வந்துவிட்டது” என்று கரீபியன் பிராந்திய தீவு நாடான பார்படோஸ் அரசு அறிவித்துள்ளது.  

பிரிட்டனிடம் சுதந்திரம் பெற்றதன் 55ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் 2021நவம்பர் மாதத்தில் இந்தத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற எதிர்பார்க்கப்பட்டுள்ளது.  

பார்படோசுக்கு பார்படோஸ்காரர் அரச தலைவராக வர வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் மியா மொட்லி உரை ஒன்றில் வைத்து குறிப்பிட்டுள்ளார்.  

கரீபியன் பிராந்தியத்தில் குடியரசாகும் முதல் முன்னாள் பிரிட்டன் காலனித்துவ நாடு பார்படோஸ் அல்ல. பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்று நான்கு ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் 1970இல் கயான அந்த படியை எடுத்தது. தொடர்ந்து ட்ரினிடாட் மற்றும் டொபாகோ 1976இலும் டொமினிக்கா 1978இலும் குடியரசாக மாறின.    

Thu, 09/17/2020 - 09:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை