அமைச்சரவை தீர்மானங்கள்

அரச மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்களின் அறிவித்தல்கள் மற்றும் விளம்பர செலவுகளில் 25% பெறுமதியான விளம்பர நிகழ்ச்சிகள் அரச இலத்திரனியல் அச்சு ஊடகங்களுக்கு வழங்க வேண்டுமென வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த பிரேரணை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

*****

2020 ஆம் ஆண்டிற்கான இலங்கை லிட்ரோ எரிவாயு கம்பனியின் திரவப் பெற்றோலிய வாயு (LPG) சுமார் 1,22,056 உலோக சிலிண்டர்கள் விநியோகத்திற்கான ஒப்பந்தம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

*****

2020/21 பெரும்போகச் நெல் மற்றும் ஏனைய பயிர்ச் செய்கைக்காக 5,30,000 மெ.தொ. உரத்தை குறைவின்றி விநியோகிக்கும் விதத்தில் இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

*****

2021 ஆம் ஆண்டுக்கான இலவசப் பாட நூல் விநியோகத்திற்கான 400 வகையான நூல்கள் அச்சிடப்பட வேண்டியுள்ளது. இதற்கென 3,152.72 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதுடன் அரச மற்றும் தனியார் அச்சகங்களூடாக அச்சிடவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

*****

திங்கட்கிழமையை அரச நிறுவனங்களில் 'பொது மக்கள் தினம்' ஆகப் பிரகடனப்படுத்துவதற்கான ஆலோசனை அமைச்சரவையில் முன் வைக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை 'பொது மக்கள் தினமாக' பிரகடனப்படுத்தினால் மக்களுக்கு மிகவும் இலகுவாக அமையுமென யோசனைகளும் முன்மொழியப்பட்டதையடுத்து திங்கட் கிழமை 'பொது மக்கள் தினமாக' பிரகடனப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Fri, 09/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை