Header Ads

ஐ.நா பொதுக் கூட்டத்திலும் சீனா – அமெரிக்கா முறுகல்

கொரோனா வைரஸ் தொற்றை சீனா பரப்பியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நியூயோர்க்கில் நடைபெறும் ஐ.நா ஆண்டு பொதுச்சபைக் கூட்டத்தில் குற்றம்சாட்டியது சீன மற்றும் அமெரிக்க முறுகலை மேலும் அதிகரித்துள்ளது.

இந்தப் பெருந்தொற்றுக்கு சீனா பொறுப்புக் கூற வேண்டும் என்று டிரம்ப் குறிப்பிட்டார்.

எனினும் எந்த நாட்டுடனும் பனிப்போர் ஒன்றில் ஈடுபட தமது நாடு எதிர்பார்க்கவில்லை என்று சீன ஜனாதிபதி சி ஜின்பின் தனது உரையில் குறிப்பிட்டார். பல விவகாரங்கள் தொடர்பில் உலகின் இரு வல்லரசு நாடுகளான சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் வீடியோ மாநாடு வழியாக நடைபெறும் பொதுச் சபைக் கூட்டத்தில் உலகத் தலைவர்கள் முன்னர் பதிவு செய்யப்பட்ட உரைகளையே வழங்கியுள்ளனர்.

சீனா தனது நாட்டில் உள்நாட்டு விமான சேவைக்கு தடைவிதித்து விட்டு வெளிநாட்டு விமான சேவைக்கு அனுமதி வழங்கி கொரோனாவை உலகிற்கு பரப்பி இலட்சக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தி விட்டதாகவும் இதன்போது டிரம்ப் சாடினார்.

Thu, 09/24/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.