Header Ads

பிள்ளையானுக்கு அமோக வரவேற்பு

மட்டக்களப்பில்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு ஒருங்கிணைப்புத் தலைவராக நியமனம் பெற்றுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு  மயிலங்கரச்சை வாழ் மக்களால் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் தெரிவிக்கும் நிகழ்வு நாவலடி மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் நேற்று இடம்பெற்றது.

இந்த வாரம் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள சென்ற வேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிடமாகவிருந்த மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு ஒருங்கிணைப்பு தலைவர் பதவி வெற்றிடத்திற்கான நியமனக் கடிதம் பிரதமரால் வழங்கி வைக்கப்பட்டது.

பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு பாதுகாப்புடன் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு தரை வழியாக மீண்டும் அழைத்து வரப்பட்டவேளை, மயிலங்கரச்சையில் ஒன்று கூடி காத்திருந்த மக்களால் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டது.

Mon, 09/28/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.