சமூக சேவையை கருத்திற்கொண்டே இனி சமாதான நீதிவான் பதவிகள்

கல்வித் தகைமை மட்டுமே தகுதியாகாது

 

கல்வித் தகைமைகளை வைத்து அன்றி சமூக சேவைகளை கருத்திற் கொண்ட தாகவே சமாதான நீதவான்கள் பதவி வழங்கப்படுகின்றன என நீதியமைச்சர் அலி சப்ரி நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சமூக செயற்பாடுகளுடன் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை சித்தி யடைந்தவர்கள் சமாதான நீதவான்களாக நியமிக்கப்படுகின்றனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் சாந்த பண்டார எம்.பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.  சாந்த பண்டார எம்.பி தமது கேள்வியின் போது,..

சமாதான நீதவான்களை நியமிக்கும் போது கருத்திற்கொள்ளும் ஆகக்குறைந்த கல்வித் தகைமைகள் எவை என்பதை தெளிவுபடுத்துமாறு கோரினார்.

அதற்கு பதிலளித்த போதே நீதியமைச்சர் அலி சப்ரி இவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,

சமாதான நீதவான் பதவிகளை வழங்கும்போது 60 வயதுக்கு குறைந்தவர்களானால் கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தி பெற்றுள்ளமை, 60 வயதுக்கு மேற்பட்டவர்களானால் அவர்களின் சமூக சேவை, நன்னடத்தை ஆகியவையே கருத்தில் கொள்ளப்படும். பாரிய சமூக சேவைகளை செய்தவர்கள் கிராமப்புறங்களிலும் உள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

Fri, 09/25/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை