ஐரோப்பாவின் மிகப்பெரிய விபச்சார விடுதி ‘திவால்'

ஜெர்மனியின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட ஐரோப்பாவின் மிகப்பெரிய விபச்சார விடுதிகளில் ஒன்று திவால்நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளது.

கொலொக்னே நகரில் பிரதான இடத்தை பெற்றிருக்கும் பாஸ்சாஸ் என்ற 10 மாடிகள் கொண்ட அந்த விபச்சார விடுதியின் பணிப்பாளர் ஆர்மின், 'நாங்கள் ஒரு முடிவில் இருக்கிறோம்' என்று உள்ளூர் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக வடக்கு ரைன் வெஸ்பாலியா மாநிலத்தில் விபச்சாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாஸ்சாஸ் விடுதியில் சுமார் 120 விலைமாதுக்கள் வழக்கமாக பணிபுரிகின்றனர். சமையல்காரர்கள், சிகை அலங்கார நிபுணர்கள் என்று அங்கு சுமார் 60 ஊழியர்கள் உள்ளனர்.

தமது வர்த்தகத்தை மீண்டும் ஆரம்பிக்க திறன் இல்லாத நிலையில் பெருந்தொற்றை கையாள்வதில் ஜெர்மனி நிர்வாகம் தோல்வி அடைந்திருப்பதாக ஆர்மின் தெரிவித்துள்ளார். வர்த்தகத்தை மீண்டும் திறக்க முடியாது என்று ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையும் அதிகாரிகள் தமக்கு தெரிவித்து வருதாக அவர் குறிப்பிட்டார்.

 

Sat, 09/05/2020 - 08:11


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை