தடுப்புமருந்து முயற்சியில் அமெரிக்கா இணையாது

உலக சுகாதார அமைப்பு தொடர்புபட்டிருப்பதால் கொவிட்–19 தடுப்பு மருந்து ஒன்றை கண்டுபிடிப்பது மற்றும் அதனை விநியோகிக்கும் சர்வதேச கூட்டு முயற்சியில் பங்கேற்க முடியாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பாதுகாப்பான மற்றும் செயல்திறன் கொண்ட தடுப்பு மருந்துக்கான அனுமதி வழங்கப்பட்ட பின் அதனை சமமாக பகிர்வதற்கு உலக சுகாதார அமைப்பின் தலைமையில் 172 நாடுகள் இணைந்துள்ள முயற்சியிலேயே அமெரிக்கா பங்கேற்க மறுத்திருப்பதாக வொசிங்டன் போஸ்ட் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

நாம் வைரஸை தோற்கடிப்போம் என்று எமது சர்வதேச கூட்டாளிகளுக்கு உறுதி அளிக்கிறோம் என்றபோதும், ஊழல் கொண்ட உலக சுகாதார அமைப்பு மற்றும் சீனா செல்வாக்கு செலுத்தும் பன்னாட்டு அமைப்புகளுக்கு நாம் கட்டுப்பட மாட்டோம் என்று வெள்ளை மாளிகை பேச்சாளர் ஜூட் டீர் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை கையாண்டது பற்றி உலக சுகாதார அமைப்பை குற்றம்சாட்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அந்த அமைப்பு சீனாவுக்கு சாதகமாக பக்கச்சார்பு கட்டுவதாக தெரிவித்தார.்

Thu, 09/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை