உணவு உற்பத்தி விவசாயப் புரட்சி வடக்கில் இன்று ஆரம்பம்

விவசாய அமைப்புகளுடன் அமைச்சர் சந்திப்பு

உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து அவற்றில் தன்னிறைவு காணும் விவசாய புரட்சியொன்றை வடக்கில் இருந்து ஆரம்பிக்க இருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.

இதற்கு முன்னோடியாக வடக்கிலுள்ள 400 விவசாய அமைப்புகளை இன்று சந்தித்து தேவையான ஊக்குவிப்புகளையும் உதவிகளையும் வழங்கி விவசாயத்துறையில் தன்னிறைவு காண நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.இதனுடன் இணைந்ததாக வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட விதவைகள்,அங்கவீனமுற்றோர், புனர்வாழ்வு பெற்ற புலி உறுப்பினர்கள் ஆகியோருக்கு சுயதொழில் வாய்ப்புகள் பெற்றுக் கொடுக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆரம்ப காலத்தில் கிழங்கு,வெங்காயம்ே,மிளகாய்,பால் உற்பத்திகளில் வடபகுதி முன்னணியில் இருந்தது.யுத்தத்தின் பின்னர் பின்னடைவு ஏற்பட்டது.இன்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய அநேக உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.அவற்றை உள்நாட்டில் உற்பத்தி செய்து விவசாய புரட்சியொன்றை ஏற்படுத்த பிரதமர் எனக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதனை வடக்கில் இருந்து ஆரம்பிக்குமாறும் அவர் கோரினார்.இதற்கமையவே இந்தத்த திட்டம் இன்று வடக்கில் ஆரம்பிக்கப்படுகிறது.அங்குள்ள விவசாயிகளை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை தீர்க்கவும் விவசாய உற்பத்திகளை அதிகரிக்க தேவையான உதவிகளை வழங்கவும் இருக்கிறோம்.பால் உற்பத்திகளும் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது.உள்நாட்டு பால் உற்பத்தியை மேம்படுத்தவும் விசேட திட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். (பா)

ஷம்ஸ் பாஹிம்

Tue, 09/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை