ஜனகன் கிண்ண கிரிக்கெட் போட்டி

கொம்பனி வீதி அனுஷன் ஏற்பாடு செய்த ஜனகன் கிண்ண கிரிக்கெட் சுற்று போட்டி கடந்த 05ம் திகதி கொழும்பு 02 ல் அமைந்துள்ள மலே கிரிக்கெட் மைதானத்தில் கோலாகலமாக இடம்பெற்றது.

இக் கிரிக்கெட் போட்டியானது அணிக்கு 11 பேர் மட்டுப்படுத்தப்பட்ட 05 ஓவர்கள் கொண்டதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இத் தொடரில் 16 அணிகள் பங்குபற்றின. விலகல் முறையில் நடைபெற்ற இச்சுற்றுப்போட்டியின் பிரதம அதிதியாக கலாநிதி வி.ஜனகன் கலந்து கொண்டு இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு வெற்றிக் கிண்ணம் வழங்கி வைத்ததுடன் போட்டியின் நாயகன் மற்றும் தொடரின் சிறப்பாட்டக்காரர், சிறந்த பந்துவீச்சாளர் ஆகியோர்களுக்கான வெற்றிக் கிண்ணங்களையும் வழங்கி வைத்தார்.

Tue, 09/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை