ஆறுமுகனின் தலைமைத்துவம் ஜீவனுக்கு சிறந்த முன்மாதிரி

மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி

நீண்ட பாரம்பரியத்தின் அடுத்த வாரிசாக வந்துள்ள ஜீவன் தொண்டமான் மீது ஒரு பாரம் சுமத்தப்பட்டுள்ளது. என்றாலும் மலையக மக்களுக்காக அவர் சேவையாற்றுவார் என நம்புகின்றோம். ஆறுமுகன் தொண்டமானின் தலைமைத்துவத்தை முன்மாதிரியாக கொண்டு அவர் சேவையாற்ற வேண்டும்.

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் குடும்பம் இந்திய வம்சாவளி மக்களுக்கு அளப்பரிய சேவையை செய்துள்ளது. அமரர் ஆறுமுகன் தொண்டமானும் நானும் ஒரே சந்தர்ப்பத்தில் தான் பாராளுமன்றத்திற்கு வந்திருந்தோம். சிறந்த முறையில் பாராளுமன்றில் பணியாற்றியிருந்தோம். அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஒரு சிறந்த அரசியல் ஞானியாக காணப்பட்டார். அவரின் அரசியல் தீர்மானங்கள் மூலம் பலரை ஈர்த்திருந்தார். அவருடைய பேரன் ஜீவன் தொண்டமான் இந்த அரசியல் இடைவெளியை நிரப்ப வந்துள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவர் தொர்ந்தும் உரையாற்றுகையில் அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவருடைய மக்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள அனைத்து அரசாங்கங்களுக்கும் அழுத்தம் கொடுத்துள்ளார். அவரை எதிர்கட்சியில் பார்ப்பது மிகவும் கஷ்டமாகும். ஆனால், கடந்த நல்லாட்சியில் அவர் எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்தார். 

Sat, 09/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை