Header Ads

வைரஸ் அச்சத்தால் சீன எல்லை நகருக்குப் பூட்டு

சீன மியன்மார் எல்லைக்கு அருகில் உள்ள ருய்லீ நகரை சீனா முடக்கியுள்ளது.

சிறிய அளவிலான வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் அங்கு பதிவாகியதைத் தொடர்ந்து அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேற்கு யூனான் மாநிலத்தில் உள்ள ருய்லீ நகர், மியன்மாருக்குள் செல்வதற்கான ஒரு முக்கிய நுழைவாயிலாக உள்ளது.

நகர மக்களை வீட்டில் தங்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். நகருக்குள் செல்லவோ, அங்கிருந்து வெளியேறவோ அனுமதியில்லை. அங்கு வசிக்கும் அனைவருக்கும் கொவிட்–19 சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

மியன்மாரில் இருந்து ருய்லீ நகருக்கு நோய் பரவியதாய்ச் சீன அதிகாரிகள் கூறுகின்றனர். சட்டவிரோதக் குடியேறிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Wed, 09/16/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.