டிரம்புக்கு நச்சுக் கடிதம் அனுப்பிய பெண் கைது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு விசம் தடவிய கடிதத்தை அனுப்பிய சந்தேக நபரை கைது செய்ததாக அமெரிக்க நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

சந்தேக நபரான அந்தப் பெண் கைது செய்யப்படும்போது துப்பாக்கியுடன் இருந்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனடா மற்றும் அமெரிக்காவின் நியூயோர்க் மாநிலத்தை இணைக்கும் பகுதியில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்பட்டிருந்த அந்தக் கடிதத்தை கடந்த சனிக்கிழமை சோதித்தபோது அதில் ரிசின் என்ற கொடிய விசம் தடவப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கடிதம் கனடாவில் இருந்து அனுப்பப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இந்த கடிதம் கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டபோதும் அது வெள்ளை மாளிகையை அடையவில்லை என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குண்டூசி முனையளவு ரிசின் நச்சுப் பொருள் 36 முதல் 72 மணி நேரத்திற்குள் மரணம் விளைவிக்கும் ஆற்றல் கொண்டது. இதுவரை அதனை முறியடிப்பதற்கான மருந்து ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை.

Tue, 09/22/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை