சவூதி அரேபியாவில் வெளிநாட்டு தொழிலாளர்களின் விசா நீடிப்பு

கொரோனா வைரஸ் தொற்றினால் பயணக் கட்டுப்பாட்டில் சிக்கி வெளிநாட்டில் இருக்கும் தொழிலாளர்களின் காலாவதியான வதிவிட விசாக்கள் புதுப்பிக்கப்படுவதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது.

சவூதிக்கு வெளியில் மற்றும் உள்ளே இருக்கின்ற வெளிநாட்டு தொழிலாளர்களின் காலாவதியான உள்நுழைவு மற்றும் வெளியேறும் விசாக்களின் செல்லுபடித் தன்மை தானாக நீடிக்கப்படும் என்று ட்விட்டர் ஊடாக அந்நாட்டு கடவுச் சீட்டுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி ஓகஸ்ட் மாதத்தில் காலாவதியான விசாக்களுக்கு கட்டணம் அறவிடப்படுவதில்லை என்பதோடு அதன் செல்லுபடித் தன்மை செப்டெம்பர் முடிவு வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்ற எல்லைகள் மூடப்பட்டதால் வெளியேற முடியாமல் சவூதியில் தொடர்ந்து தங்கி இருக்கும் அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களுக்குமான வெளியேறும் விசாவுக்கான செல்லுபடித் தன்மையும் நீடிக்கப்பட்டிருப்பதாக கடவுச்சீட்டுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சவூதி பிரஜைகள் மற்றும் அவர்களின் சவூதி அல்லாத குடும்ப உறுப்பினர்கள் சவூதி வருவதற்கு தரைவழி எல்லை ஓகஸ்ட் மாதம் திறக்கப்பட்டபோதும் சர்வதேச பயணங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கான திகதியை சவூதி இன்னும் அறிவிக்கவில்லை.

Wed, 09/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை