வீட்டில் குண்டு விழுந்து ஈராக்கில் ஐந்து பேர் பலி

ஈராக் தலைநகர் பக்தாதின் விமானநிலையத்திற்கு அருகில் உள்ள வீடு ஒன்றின் மீது ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்து ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் மூன்று சிறுவர்களே கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இரு சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கு எந்தக் குழுவும் பொறுப்பேற்காதபோதும் இந்த ரொக்கெட் குண்டு விழுந்த பகுதிக்கு அருகிலேயே அமெரிக்கத் தூதரகமும் உள்ளது. ஈரான் ஆதரவு போராளிகளால் இங்குள்ள அமெரிக்க தூதரகம் அடிக்கடி இலக்கு வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த பல மாதங்களில் ஈராக்கில் பொதுமக்கள் கொல்லப்படுவது இது முதல் முறையாக உள்ளது.

கடும் பாதுகாப்புக் கொண்ட பகுதியில் அமைந்திருக்கும் அமெரிக்கத் தூதரகத்தை இலக்கு வைத்து கடந்த பல மாதங்களாக அடிக்கடி ரொக்கெட் தாக்குதல் நடத்தப்படுகின்றபோதும் அதனைத் தடுப்பதற்கு ஈராக் அரசு தவறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Wed, 09/30/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை