தற்கொலை தாக்குதல் நடத்துமளவிற்கு முஸ்லிம்களுக்கு பிரச்சினை கிடையாது

ஆணைக்குழுவில் முஜீபுர் ரஹ்மான் எம்.பி சாட்சியம்

வேறு தரப்பினரின் தேவைக்காகவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டது.இதனுடன் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு தொடர்பு கிடையாதென ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள நபர்களை சரியாக அறிய முதலில் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ள தாக்குதலுடன் தொடர்புள்ள சாராவை நாட்டுக்கு அழைத்து வர வேண்டும்.

எமது நாட்டிள்ள முஸ்லிம்களுக்கு தற்கொலை தாக்குதல் நடத்துமளவு பிரச்சினை கிடையாது.

அன்று பாதுகாப்பிற்கு பொறுப்பான அமைச்சராக முன்னாள் ஜனாதிபதி செயற்பட்டார்.இங்கு பல குறைபாடுகள் நிகழ்ந்துள்ளன என்றும் அவர் கூறினார்.

இதே வேளை உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழுவில் சாட்சியமளித்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர,சஹ்ரான் ஹாசீமிற்கு சுதந்திரமாக செயற்படுவதற்கு பொலிஸ் திணைக்கள குறைபாடே காரணமாக அமைந்ததாக ஏற்றுக் கொண்டார். தாக்குதலுக்கு முன்னர் ஆமி மொஹிதீன் கைது செய்யப்பட்டார்.அந்த சமயத்தில் சஹ்ரானையும் கைது செய்திருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுத்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

Wed, 09/30/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை