பெலாருஸ் நாட்டின் மற்றொரு எதிர்க்கட்சி தலைவர் கைது

பெலாருஸின் மற்றொரு எதிர்க்கட்சி அரசியல்வாதியான மக்சிம் ஸ்னெக் முகமூடி அணிந்தவர்களால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டில் நீடிக்கும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் எதிர்க்கட்சியினரை ஒடுக்கும் திட்டமிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மற்றொரு எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொலஸ்னிகோவா கைது செய்யப்பட்டு இரண்டு தினங்களிலேயே ஸ்னெக்கும் கைதாகியுள்ளார். இந்த இருவரும் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகசென்கோவை பதவி விலகும்படி கோரும் ஆர்ப்பாட்டங்களில் முன்னின்று செயற்பட்டவர்களாவர்.

கடந்த ஓகஸ்ட் 9ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் லுகசென்கோ வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டபோதும் அதில் மோசடி இடம்பெற்றதாக எதிர்ப்பாளர்கள் கூறி வருகின்றனர். பெலாருஸ் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பில் தொடர்ந்து அந்நாட்டில் இயங்கிவந்தவர்களில் கடைசியானவராகவே ஸ்னெக் இருந்தார். எஞ்சிய அனைவரும் நாட்டை விட்டு தப்பிச்சென்று அல்லது கைது செய்யப்பட்டுள்ளனர். 1994 ஆம் ஆண்டு தொடக்கம் பெலாருஸில் ஆட்சியில் இருக்கும் லுகசென்கோ தமது அரசுக்கு எதிராக மேற்குலக சக்திகள் செயற்படுவதாக கூறி வருகிறார்.

Thu, 09/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை