பீஜிங்கில் உறைந்த உணவுகளின் இறக்குமதிகளுக்குக் கட்டுப்பாடு

கொவிட்–19 நோய்த்தொற்று கடுமையாக உள்ள நாடுகளிலிருந்து உறையவைக்கப்பட்ட உணவுப் பொருட்களைத் தருவிப்பதைத் தவிர்க்குமாறு சீனத் தலைநகர் பீஜிங் நிர்வாகம் இறக்குமதியாளர்களை வலியுறுத்தியுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட கடலுணவில் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்ட பல்வேறு சம்பவங்களை அடுத்து பீஜிங் அவ்வாறு தெரிவித்தது.

அதன் மூலம் வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாக இறக்குமதியாளர்களுக்கு அனுப்பப்பட்ட அறிக்கையில் பீஜிங் நகராட்சி வர்த்தகப் பிரிவு குறிப்பிட்டது.

வெளிநாடுகளின் வைரஸ் தொற்றுச் சூழலைக் கூர்ந்து கண்காணிக்குமாறும் இறக்குமதிகளுக்கு மாற்றுத் திட்டங்களைச் செயல்படுத்துமாறும் அது கூறியது. மேலும், பொருட்களில் வைரஸ் தென்பட்டால் உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் அளிக்கும்படி அது கேட்டுக்கொண்டது.

சீனாவில் சுமார் 1 மாதமாகச் சமூக அளவில் யாருக்கும் வைரஸ் தொற்றியதாகப் பதிவாகவில்லை.

அண்மையில் பிரேசில், இந்தோனேசியா, ரஷ்யா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கடலுணவுக்குச் சீனா தற்காலிகமாகத் தடை விதித்தது.

Tue, 09/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை