வடக்கில் முதலீடுகளுக்கு உரிய கள ஆய்வின் பின்னர் அனுமதி

அதிகாரிகளிடத்தில் ஆளுநர் வலியுறுத்து

உரிய கள ஆய்வுகளின் பின்னர் வடமாகாண முதலீடுகளுக்கான அனுமதிகளை அளிக்குமாறு அதிகாரிகளிடத்தில் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

வட மாகாணத்தில் முதலீடுகள் செய்வதற்கான திட்டங்களை மெகா இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவன அதிகாரிகள் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸுக்கும் மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கும், பிரதம செயலாளருக்கும் மற்றும் சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கும் செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் காட்சிப்படுத்தியிருந்தனர்.

இதன்போது முதலீட்டாளர்கள் ஆடை உற்பத்தி மற்றும் நட்சத்திர விடுதி அமைப்புக்கான அனுமதிகளை அளிக்குமாறும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் கருத்து வெளியிட்ட வடமாகாண ஆளுநர் சார்ள்ஸ்,

முதலீட்டாளர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஆடை உற்பத்தி நிறுவனம் மற்றும் நட்சத்திர விடுதி அமைப்பதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதோடு சீமெந்து தொழிற்சாலை போன்ற ஏனைய திட்டங்களுக்கான திட்ட அறிக்கைகளைச் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பிக்குமாறும் குறிப்பிட்டார்.

அத்துடன் முதலீட்டுத்திட்டங்களுக்கான அனைத்து உதவிகளையும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய கள ஆய்விற்குப் பின்னர் வழங்குங்கள் என்றும் வலியுறுத்திக் கூறினார்.

வேலனை குறூப் நிருபர்

Fri, 09/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை