கலிபோர்னியாவில் தொடரும் காட்டுத் தீயால் பெரும் சேதம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் தொடரும் காட்டுத் தீச் சம்பவங்கள் 2 மில்லியன் ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை அழித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அது சுமார் 1.5 மில்லியன் காற்பந்துத் திடல்களுக்குச் சமமானதாகும். 33 ஆண்டுகள் காணாத அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தீயணைப்புத்துறையினர் கூறியுள்ளனர்.

கலிபோர்னியாவில் காட்டுத் தீச் சம்பவங்கள் வழக்கமாக நேரும் காலம் முடிவடைய இன்னும் 2 மாதங்கள் உள்ள வேளையில் இத்தகவல் வெளியாகியுள்ளது.

கலிபோர்னியாவில் தற்போது சாதனை அளவுக்கு கடும் வெப்பநிலை பதிவாகி உள்ளது. லொஸ் ஏஞ்சல்ஸ் கவுன்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இதுவரை இல்லாத அளவில் 49.4 பாகை வெப்பநிலை பதிவானது.

இவ்வாண்டு ஏற்பட்ட காட்டுத் தீயால் குறைந்தது 7 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 3,800 கட்டடங்கள் அழிக்கப்பட்டன அல்லது சேதமடைந்தன.

இதுவரை 14,100க்கும் அதிகமான தீயணைப்பாளர்கள், 24 வெவ்வேறு தீச் சம்பவங்களில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

Wed, 09/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை