எல்லைகளை கட்டுப்படுத்தும் சுவிஸ் வாக்கெடுப்பு தோல்வி

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடனான சுதந்திர நடமாட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டின் எல்லைகளை கட்டுப்படுத்துவது குறித்த பரிந்துரையை சுவிட்சர்லாந்து வாக்காளர்கள் நிராகரித்துள்ளனர்.

இது தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சர்வஜன வாக்கெடுப்பில் 62 வீதமானவர்கள் இந்த சுதந்திர நடமாட்டத்தை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள ஆதரவு அளித்ததோடு 38 வீதமான வாக்காளர்களே அதனை எதிர்த்தனர்.

சுவிட்சர்லாந்து ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடு இல்லாதபோதும் அந்த அமைப்புடன் செய்துகொண்ட உடன்படிக்கையின்படி இந்த சுதந்திர நடமாட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

குடியேற்றவாசிகளை கட்டுப்படுத்தும் வகையில் சுவிஸ் மக்கள் கட்சி இந்தத் தீர்மானத்தை கொண்டுவந்தபோதும் அதனை அந்நாட்டு அரசு எதிர்த்தது. சுவிட்சர்லாந்தில் வாழும் 2.1 மில்லியன் வெளிநாட்டினர்களில் இரண்டில் ஒரு பங்கினர் ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகளாவர்.

சுவிட்சர்லாந்தின் நேரடி ஜனநாயக அமைப்பின் அடிப்படையில், ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தம் ஒன்றை ரத்துச் செய்வதில் உடன்பாடு ஒன்று எட்டப்படாத பட்சத்தில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு அரசு நிர்ப்பந்திக்கப்படுகிறது.

Tue, 09/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை