நல்லாட்சியின் செயற்பாடுகளுக்கு நான் முழுமையான பொறுப்பல்ல

முகநூலில் குற்றஞ் சாட்டுவோருக்கு மனோ MP பதில்

நல்லாட்சி கால "மத்திய வங்கி பிணைமுறி" ஊழல் தொடர்பாக என்னிடம் கேள்வி எழுப்பி பிரயோசனம் இல்லை. அவை பற்றி ரணில் விக்கிரமசிங்க, ரவி கருணாநாயக்க உள்ளிட்ட அர்ஜுன் மகேந்திரன், அலோசியஸ் கும்பலிடம்தான் கேட்க வேண்டு மென தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவர்,முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

சிங்கள அரசியல்வாதிகளிடம் கேட்க வேண்டிய கேள்விகளுக்கு நான் பதிலளிக்கவோ, பொறுப்பேற்கவோ முடியாதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தை இன்னமும் கரித்து கொட்டும் இனவாத முகநூலர்களின் பதிவுகளை அப்படியே காப்பியடித்து, எனது முகநூலுக்குள் உள்நுழைந்து, அவ்வப்போது மறுபதிவு செய்யும், ஒருசில "அறிவாளி" தமிழ் எழுதும் நண்பர்கள் ஒன்றை தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசு என்பது ஒரு கூட்டணி அரசாங்கம். அதில் அங்கம் வகித்த தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், வெளியிலிருந்து ஆதரவளித்த தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இருந்த முன்னுரிமை தேவைகள் வேறு என்பதை அறிவாளி நண்பர்கள் முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும்.

எம்மை பொறுத்தவரை "மலையக தோட்டங்களில் 07 பேர்ச் காணி, சொந்த தனி வீடு, தமிழ் கிராமங்கள், வட கொழும்பில் சேரிப்புறங்களை ஒழித்து கட்டப்பட்ட 13,000 தொடர்மாடி மனைகள், அங்கே, வெளியாட்களை குடியேற்றாமல், அந்நிலத்து சேரிகளில் வாழ்ந்த தமிழ், முஸ்லிம் மக்களையே குடியேற்றியமை, மலையக புதிய பிரதேச சபைகள், மலைய அதிகார சபை" என நீண்ட சாதனை பட்டியல் உண்டு.

Sat, 09/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை