7 நாள் தனிமைப்படுத்தல் காலத்துடன் இலங்கை வர பங்களாதேஷ் அழுத்தம்

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பங்களாதேஷ் வீரர்கள் ஏழு நாள் தனிமைப்படுத்தலில் ஈடுபட இலங்கை கிரிக்கெட் சபை அறிவுறுத்தியதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைமை நிர்வாக அதிகாரியான நிசாமுத்தீன் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கை வரும் பங்களாதேஷ் வீரர்கள் 14நாட்கள் தனிமைப்படுத்தலில் ஈடுபடுவதற்கு முன்னர் கட்டுப்பாடு விதித்திருந்தது. இந்த சுற்றுப்பயணத்தை சிக்கலுக்கு உள்ளாக்கியிருந்தது. இதனை ஏற்றுக்கொள்ளாத பங்களாதேஷ் கிரிக்கெட் சபை, இதனால் பயிற்சிப் போட்டியில் அட முடியாது ஏற்படும் என்று குறிப்பிட்டது. இதற்கு பதில் 7நாள் தனிமைப்படுத்தலை மேற்கொள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் சபை கேட்டுக்கொண்டது.

இந்நிலையில் 7நாள் தனிமைப்படுத்தல் பின்பற்றப்படும் என்றும் அவ்வாறு முடியுமான வரை குறைப்பதற்கு முயற்சிப்பதாகவும் இலங்கை கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை டாக்காவில் செய்தியாளர்களை சந்தித்த நிசாமுத்தீன், 7நாள் தனிமைப்படுத்தலில் பிரச்சினை இல்லை என்றும் அவ்வாறென்றால் சுற்றுப்பயணம் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

“இலங்கை கிரிக்கெட் சபையுடன் நாம் தொடர்ந்து பேசி வருகிறோம். நாம் அவர்களிடம் விரிவான திட்டத்தை நாடியுள்ளோம். எனினும் தனிமைப்படுத்தல் காலத்தை குறைப்பது பற்றி அவர்களின் சுகாதார அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக இலங்கை கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.

எமது வீரர்களுக்கு தாங்கிக்கொள்ளும் வகையில் முடியுமானவரை தனிமைப்படுத்தல் காலத்தை குறைப்பதற்கு அவர்கள் முயற்சிக்கின்றார்கள்” என்று நிசாமுத்தீன் இதன்போது தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சபையின் உத்தியோகபூர்வ அறிவித்தல் வரும் வரை தாம் காத்திருப்பதாகவும் நிசாமுத்தீன் குறிப்பிட்டுள்ளார். வீரர்களுக்கு ஏழு நாள் தனிமைப்படுத்தல் பின்பற்றப்பட்டால் சுற்றுப்பயண ஏற்பாடுகள் திட்டமிட்டபடி இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“கடைசியாக இலங்கை கிரிக்கெட் சபையை நாம் தொடர்புகொண்டபோது வீரர்கள் இலங்கை சென்ற பின் ஏழு நாள் தனிமைப்படுத்தலுக்கு முகம்கொடுக்க வேண்டும் என்றும் அதன் பின் அவர்கள் பயிற்சிக்கு செல்ல முடியும் என்றும் கூறப்பட்டது. ஏழு நாள் தனிமைப்படுத்தல் நீடிப்பதாயின் திட்டமிட்டபடி தொடரை நடத்த முடியும் என்று நாம் நம்புகிறோம். என்றாலும் இது பற்றி மேலும் கருத்து வெளியிடுவதற்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் சபையின் முடிவுக்காக நாம் காத்திருக்க வேண்டியுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதற்காக பங்களாதேஷ் அணி வரும் செப்டெம்பர் 27ஆம் திகதி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளது.

இலங்கை சுற்றுப்பயணத்தில் பங்களாதேஷ் டெஸ்ட் அணியுடன் உயர் திறன் அணி ஒன்றும் அனுப்பப்படவுள்ளது. இதனால் இந்த மாத இறுதியில் 60 பேர் வரை இலங்கை சுற்றுப்பயணத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உயர் திறன் அணியும் இந்த ஆண்டு ஆரம்பத்தில் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்தது. இலங்கையில் டெஸ்ட் அணியின் ஏற்பாடுகளுக்கு உதவியாகவே இந்த உயர் திறன் அணி அனுப்பப்படவுள்ளது.

Mon, 09/14/2020 - 12:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை