7 பில்லியன் ஆண்டுகளின் ஈர்ப்பு அலை அவதானிப்பு

இதுவரை பூமியை தாக்கிய மிகப் பழமையான மற்றும் தொலைதூர ஈர்ப்பு அலைகள் மூலம் இரு கருந்துளைகளின் பாரிய இணைப்பு ஒன்றை வானியலாளர்கள் அவதானித்துள்ளனர்.

இந்த கருந்துளைகளின் மோதலினால் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட முதல் இடைநிலை நிறை கொண்ட கருந்துளை உருவாகி இருப்பதோடு எமது சூரியனை விடவும் இது 142 மடங்கு நிறை கொண்டதாக உள்ளது.

இந்த பெரும் மோதலினால் விடுவிக்கப்பட்ட எட்டு சூரியன்களுக்கு நிகரான ஆற்றல் காரணமாக ஈர்ப்பு அலை விண்வெளியில் தொடர்ந்து நீடிக்கிறது. இந்த ஈர்ப்பலையானது பூமியை அடைவதற்கு 7 பில்லியன் ஆண்டுகள் விண்வெளியில் பயணித்துள்ளது. இந்த ஈர்ப்பு அலை அமெரிக்காவில் உள்ள ஈர்ப்பலை ஆய்வகம் மற்றும் இத்தாலியில் உள்ள ஆய்வகங்களில் கடந்த 2019 ஆம் ஆண்டு மே 21 ஆம் திகதி அவதானிக்கப்பட்டுள்ளது. இந்த இரு ஆய்வுகளின் விபரம் கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்டது.

Fri, 09/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை