முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்விடம் 6 மணிநேரம் வாக்குமூலம் பதிவு

முஜிபுர் ரஹ்மானிடம் 4 மணிநேர வாக்குமூலம்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு முன்னிலையில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் நேற்று ஆஜரானார். ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு முன்னிலையில் ஆஜராகுமாறு விடுக்கப்பட்டிருந்த அழைப்பிற்கு அமைய அவர் காலை 9.30 மணியளவில் ஆஜராகியதாக தெரிவிக்கப்படுகின்றது. இவரிடம் 6 மணித்தியாலத்திற்கு மேல் வாக்குமூலம் பெறப்பட்டதாக அறிய வருகிறது.

இது தவிர ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானும் நேற்று ஆணைக்குழுவில் ஆஜரானார். இவர் சுமார் 4 மணிநேரம்சாட்சியமளித்ததாக அறிய வருகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஆராயும் ஆணைக்குழு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட முன்னாள் அமைச்சர்கள் ,பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட பலரிடம் வாக்குமூலம் பெற்று வருகிறது.(பா)

 

 

Tue, 09/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை