பிரிட்டனில் 6 பேருக்கு மேல் கூட கட்டுப்பாடு

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த இங்கிலாந்து எங்கும் சமூக ஒன்றுகூடல்கள் தொடர்பில் கடுமையான புதிய முடக்கநிலை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வரும் செப்டெம்பர் 14 தொடக்கம் ஒன்றுகூடல்கள் ஆறு பேருக்கு மேற்படாத வகையில் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதோடு மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். இந்தப் புதிய விதி தொழில் இடங்கள் அல்லது பாடசாலைகளில் அமுல்படுத்தப்பட்டபோதும் திருமணங்கள், இறுதிச் சடங்குகள் மற்றும் சில விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் அண்மைய தினங்களில் வைரஸ் தொற்றாளர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை 2,460 புதிய நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது ஓகஸ்ட் மாதத்தில் நாளுக்கு சுமார் 1,000 புதிய நோய்த்தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

“வைரஸ் பரவலை நிறுத்துவதற்கு நாம் இப்போதே செயற்பட வேண்டும்” என்று ஜோன்சன் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Thu, 09/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை