6000 கால்நடைகள், 40 பேருடன் சூறாவளியில் சிக்கி கப்பல் மாயம்

40க்கும் அதிகமான பணிக் குழுவினர் மற்றும் 6000 கால்நடைகளுடனான சரக்குக் கப்பல் ஒன்று சூறாவளியில் மூழ்கியதாக அஞ்சப்படும் நிலையில் அந்தக் கப்பலில் இருந்த ஒருவர் ஜப்பான் கடலோரக் காவல்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

உயிர்காப்பு அங்கியுடன் கடலில் தத்தளித்த நிலையில் காப்பற்றப்பட்ட அந்த நபர் தமது கப்பல் மூழ்கியதாக தெரிவித்துள்ளார்.

மேசக் சூறாவளியில் சிக்கிய நிலையில் கிழக்கு சீனக் கடலில் இருந்து இந்தக் கப்பல் கடந்த புதன்கிழமை அபாய சமிக்ஞை அனுப்பியுள்ளது.

கப்பல் மற்றும் அதில் இருந்த ஏனையவர்கள் தொடர்ந்து தேடப்பட்டு வரும் நிலையில் உயிர்தப்பிய வேறு எவரும் மீட்கப்படவில்லை.

இதில் பிலிப்பைன்ஸ் நாட்டவர் ஒருவரே காப்பாற்றப்பட்டிருப்பதோடு, அலை ஒன்றால் தாக்கப்பட்ட கப்பலின் எஞ்சின் செலிழந்ததை அடுத்தே அது மூழ்கியது என்று அவர் கூறியதாக ஜப்பான் கடலோரக் காவல் படையினர் தெரிவித்துள்ளனர். இந்தக் கப்பல் கடந்த ஓகஸ்ட் 14 ஆம் திகதி நியூசிலாந்தில் இருந்து புறப்பட்டு சீனாவை நோக்கி பயணித்துக் கொண்டிருந்ததாக நியூசிலாந்து வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

Fri, 09/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை