பெலாரஸ் ஆர்ப்பாட்டங்களில் 600க்கும் அதிகமானோர் கைது

பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகசென்கோவுக்கு எதிராக ஆறு வாரங்களாக தொடர்ச்சியாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தப் பதற்றத்தில் குறைந்தது 633 பேர் கைது செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சு நேற்று தெரிவித்தது.

தலைநகர் மின்ஸ்கில் இராணுவம் மற்றும் நீர்ப் பீச்சியடிக்கும் வாகனங்கள் நிறுத்தப்பட்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கானோர் கடும் பாதுகாப்பை மீறி பேரணி நடத்தினர்.

கடந்த மாதம் இடம்பெற்ற தேர்தலில் லுகசென்கோ மீண்டும் வெற்றியீட்டியது குறித்து தேர்தல் மோசடி குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் அவரை பதவி விலகும்படி ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரி வருகின்றனர்.

இந்த எதிர்ப்பை ஒடுக்க அரசு முயன்று வரும் நிலையில் இது தொடர்பான பதற்ற சூழலில் இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளனர். எதிர்க்கட்சியின் பெரும்புள்ளிகள் பலரும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். கைதாகும் அச்சுறுத்தல் காரணமாக மற்றொரு செயற்பாட்டாளரான ஒல்கா கெவல்கோவா, போலந்தில் தஞ்சமடைந்துள்ளார்.

1994 ஆம் ஆண்டு தொடக்கம் ஆட்சியில் இருக்கும் லுகசென்கோ, மேற்கத்தேய நாடுகள் உள்நாட்டில் தலையிடுவதாக குற்றம்சாட்டி வருகிறார்.

Tue, 09/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை