60 ஆண்டுகளில் முதல்முறை ஆசிய பொருளாதார மந்தநிலை

ஆசியாவில் வளர்ந்து வரும் வட்டாரத்தின் பொருளாதாரங்கள் 60 ஆண்டுகளில் முதல் முறையாக சுருங்கவுள்ளதாய் ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது. இவ்வாண்டில் மட்டும் அந்த வட்டாரங்களின் மொத்தப் பொருளாதாரம் 0.7 வீதம் சுருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக ஆசிய அபிவிருத்தி வங்கி வெளியிட்ட 0.1 வீத எதிர்வுகூறலைக் காட்டிலும் அது அதிகம்.

கொவிட்–19 நோய்ப்பரவல் நீடிப்பதால், விநியோகத் துறை இன்னும் கூடுதல் பாதிப்பை எதிர்நோக்கக்கூடும். வியட்நாம், மியன்மார் ஆகியவற்றைத் தவிர, மற்ற தென்கிழக்காசியப் பொருளாதாரங்கள் மோசமாகச் சுருங்கியுள்ளன.

எனினும், சீனா போன்ற சில பொருளாதாரங்கள் தொடர்ந்து வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாண்டில் சீனா, 1.8 வீத கூடுதல் வளர்ச்சி காணக்கூடும்.

அடுத்த ஆண்டு முழுமைக்கும் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 7.7 வீதமாக இருக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

Wed, 09/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை