பெண்ணின் வயிற்றிலிருந்து 4 அடி பாம்பு வெளியேற்றம்

வடக்கு ரஷ்யாவின் லெவாஷி கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணின் வயிற்றுக்குள் இருந்து 4 அடி நீளம் கொண்ட பாம்பை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

வழக்கமாக வீட்டின் முற்றத்தில் திறந்தவெளியில் உறங்கும் பழக்கம் கொண்ட அப்பெண்ணின் வயிற்றுக்குள் ஏதோ ஒன்று நெளிவதைப் போன்று உணர்ந்துள்ளார். உடனடியாக அவர் மருத்துவமனைக்குச் சென்றார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், உயிருடன் ஏதோ ஒரு உயிரினம் உள்ளே இருப்பதை உறுதி செய்து என்டோஸ்கோப்பி உதவியுடன் அதை வெளியேற்ற முடிவு செய்தனர்.

அறுவை சிகிச்சை அறையில் பெண்ணின் வயிற்றுக்குள் எண்டோஸ்கொப்பி கருவியை உள்ளே செலுத்தி அந்த உயிரினத்தை பிடித்து வெளியே இழுத்தனர். அப்போதே அது 4 அடி நீளம் கொண்ட பாம்பு என்பதை அறிந்து மருத்துவர்கள் அதிர்ந்து போயினர்.

இந்த காட்சியை அங்கே பணியில் இருந்த மற்றொரு மருத்துவர் வீடியோ எடுத்து வெளியிட அது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இது என்னவோ அரிய சம்பவம் இல்லை என்றும், அப்பகுதியில் வழக்கமாக நடப்பதுதான் என்றும் அந்த கிராமப் பெரியவர்கள் கூறியுள்ளனர்.

Thu, 09/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை