ஆஸியில் 400 திமிங்கிலங்களின் உடல்களை அகற்றப் போராட்டம்

அவுஸ்திரேலிய அதிகாரிகள் சுமார் 400 திமிங்கிலங்களின் சடலங்களைக் கடலில் வீசி அகற்றும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கரையோரங்களில் ஒதுங்கிச் சிக்கிக்கொண்ட திமிங்கிலங்களில் உயிர் பிழைத்தவற்றைவிட இறந்தவையே அதிகம்.

காப்பாற்றப்பட்ட சுமார் 70 பைலட் வகை திமிங்கிலங்ளை மீட்புப் பணியாளர்கள் கடந்த வியாழனன்று விடுவித்தனர். விடுவிக்கப்பட்ட திமிங்கிலங்களில் அதிகமானவை ஆழ்கடலுக்கு நீந்தி உயிர் பிழைத்தன. அவற்றில் 4 திமிங்கிலங்கள் கருணைக்கொலை செய்யப்பட்டன.

எஞ்சியுள்ள 20 திமிங்கிலங்கள் ஆழமற்ற நீரில் தத்தளிக்கின்றன.

5 நாட்களுக்கு முன் அவை 470 திமிங்கிலங்கள் கொண்ட குழுவாக டஸ்மேனியா தீவைச் சுற்றி நீந்திய வண்ணம் காணப்பட்டன.

இறந்த திமிங்கிலங்களைக் கடலில் வீசும் பணி அவ்வளவு இலகுவானதல்ல.

கடலில் சடலங்களை வீசும் போது அவை அழுகிப் போய் சுற்றுப்புறத் தூய்மைக் கேட்டை உண்டாக்கலாம்.

அதனால் அவற்றை தூரத்தில் வீசிவிட வேண்டும் எனக் கடல் ஆய்வாளர் வனெஸா பிரோட்டா பரிந்துரைத்தார்.

மீட்புப் பணியிலும், இறந்த திமிங்கிலங்களை அகற்றும் பணியிலும் அரசாங்க ஆய்வாளர்கள், தொண்டூழியர்கள் உட்பட 60 பேர் ஈடுபட்டுள்ளனர்.

Sat, 09/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை