ஆஸி. கரையில் சிக்கிய 380 திமிங்கிலங்கள் பலி

அவுஸ்திரேலியாவின் தொலைதூர தெற்குப் பகுதி கடற்கரையில் சிக்கி இருக்கும் சுமார் 470 திமிங்கிலங்களில் அதிகமானவை இறந்திருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். தொடர்ந்து உயிருடன் இருப்பவற்றை காப்பாற்றுவதற்கு மீட்பாளர்கள் போராடி வருகின்றனர்.

டஸ்மேனிய மாநிலத்தில் மக்யூரி துறைமுகத்தின் கரடுமுரடான மணல்திட்டு பகுதியில் பைலட் இன திமிங்கிலங்கள் சிக்கி இருப்பது கடந்த திங்கட்கிழமை முதல் முறை அவதானிக்கப்பட்டது.

கடந்த இரண்டு நாட்களாக கடுமையான மீட்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வந்த நிலையில் குறைந்தது 380 திமிங்கிலங்கள் இறந்திருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மெக்யூரி துறைமுகத்திற்கு அருகே திமிங்கிலங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி இருக்கும் காட்சிகளை அதிகாரிகள் வானில் இருந்து படம்பிடித்துள்ளனர்.

நேற்று பின்னேரம் சுமார் ஐம்பது திமிங்கிலங்கள் விடுவிக்கப்பட்டு ஆழ் கடலுக்கு அனுப்பப்பட்டன. இந்நிலையில் தொடர்ந்து 30 திமிங்கிலங்கள் அந்த மணல்திட்டில் உயிருடன் உள்ளன. இந்த வகை திமிங்கிலங்கள் 23 அடி நீளத்திற்கு வளரும் என்பதோடு 3 தொன் எடை வரை இருக்கும்.

டஸ்மேனிய மாநிலத் தலைநகர் ஹோபார்டில் இருந்து சுமார் 200 கிலோமீற்றர் தூரத்திலேயே இந்த திமிங்கிலங்கள் நிர்க்கதியான நிலையில் சிக்கியுள்ளன. இது நவீன அவுஸ்திரேலிய வரலாற்றில் மிகப்பெரிய சம்பவம் என்பதோடு உலகில் மிகப் பெரிய சம்பவங்களில் ஒன்றாகவும் உள்ளது. எனினும் இவ்வாறு திமிங்கிலங்கள் கூட்டமாக வந்து சிக்கிக் கொள்ளும் நிகழ்வு விஞ்ஞானிகளுக்கு மத்தியில் மர்மமாக உள்ளது.

Thu, 09/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை