30 ஆண்டுகளில் ஆஸியில் முதல் பொருளாதார வீழ்ச்சி

அவுஸ்திரேலியாவில் முப்பது ஆண்டுகளில் முதல் முறையாக பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அந்நாட்டின் பொருளாதாரம் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலகட்டத்தில் 7 வீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.

1991 ஆம் ஆண்டுக்குப் பின்னரே அந்நாட்டில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. மார்ச் மாதத்திற்குப் பின் இதுவரை 10 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலையிழந்துள்ளனர். இதனால் பொருளாதாரத்தை ஊக்குவிக்க 200 பில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் ஊக்குவிப்புத் திட்டத்தை அவுஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.

தொடர்ச்சியாக இரு காலாண்டுகளில் பாதகமான வளர்ச்சியை வைத்தே பொருளாதார மந்தநிலை கணிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் கடுமையான காட்டுத் தீ காரணமாக பாதிக்கப்பட்ட அவுஸ்திரேலிய பொருளாதாரம் தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்றினால் வீழ்ச்சியை சந்தித்தது.

Thu, 09/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை