மெல்போர்ன் முடக்க நிலை மேலும் 2 வாரங்கள் நீடிப்பு

கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் போதுமான அளவில் குறையாததால் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கடைப்பிடிக்கப்படும் கடுமையான முடக்க நிலை இன்னும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்படும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.  

சில தளர்வுகளுடன் வரும் செப்டெம்பர் 28ஆம் திகதி வரை கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் என்று விக்டோரியா மாநில தலைவர் டானியல் அன்ட்ரூஸ் தெரிவித்துள்ளார்.  

ஒப்டோபர் மாதம் தொடக்கம் இந்தக் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும். அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற இரண்டாவது அலை வைரஸ் தொற்றின் மையமாக மாறிய இந்த மாநிலத்தில் மொத்த உயிரிழப்பான 753இல் 90வீதமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.  

26மில்லியன் மக்கள் தொகை கொண்ட அவுஸ்திரேலியாவில் மொத்தம் 26,000க்கும் அதிகமான நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.  

இதில் நோய்த் தொற்று சம்பவங்கள் அதிகரித்ததை அடுத்து கடந்த ஜூலை 9 ஆம் திகதி மெல்போர்ன் நகரில் இரண்டாவது முடக்கநிலை அமுல்படுத்தப்பட்டது. கடைகள் மற்றும் வர்த்தகங்கள் மூடப்பட்டு 5 கிலோமீற்றர் தூர பயணக் கட்டுப்பாடு மற்றும் இரவு நேர ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.    

Mon, 09/07/2020 - 12:29


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை