அவுஸ்திரேலிய விரிகுடாவில் 270 திமிங்கிலங்கள் நிர்க்கதி

அவுஸ்திரேலியாவின் டஸ்மேனிய தீவில் உள்ள விரிகுடா ஒன்றில் சுமார் 270 திமிங்கிலங்கள் சிக்கி இருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அவைகளை மீட்கும் சாத்தியங்கள் பற்றி கடல்சார் நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

அந்த தீவின் கரடுமுரடான மக்குவாரி துறைமுகப் பகுதியில் இருக்கும் இந்த திமிங்கிலங்கள் மணல்திட்டு ஒன்றில் சிக்கி இருப்பதாக நம்பப்படுகிறது.

அந்தத் தளத்திற்கு பொலிஸார் விரைந்திருப்பதோடு கடல்சார் நிபுணர்கள் நிலைமையை ஆராய்ந்து வருவதாக டஸ்மேனிய சுற்றுச்சூழல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. திமிங்கிலங்களை மீட்கும் கருவிகளுடன் மீட்பாளர்கள் அங்கு செல்லவிருப்பதாகவும் அது குறிப்பிட்டது.

பைலட் திமிங்கலங்களே இவ்வாறு சிக்கி இருப்பதாக நம்பப்பட்டபோது அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

முன்னதாக அவுஸ்திரேலியாவின் முதலைகள் இருக்கும் நதி ஒன்றில் ஹம்பக் திமிங்கிலங்கள் வழி தவறி நுழைந்த சம்பவத்திற்கு ஒரு வாரத்திற்குப் பின்னரே இது இடம்பெற்றுள்ளது. எனினும் அந்த ஹம்பக் திமிங்கிலங்கள் மீண்டும் பாதுகாப்பாக கடலுக்கு திரும்பியுள்ளன.

Tue, 09/22/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை