உலக கொரோனா தொற்று 27 மில்லியனாக அதிகரிப்பு

உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை நேற்று 27 மில்லியனைத் தொட்டதாக அது தொடர்பில் தரவுகளை சேகரிக்கும் ஜோன் ஹொப்கின்சன் பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நோய்த் தொற்றினால் 882,000க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக அந்தப் பல்கலைக்கழக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. உலகில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக தொடர்ந்து நீடிக்கும் அமெரிக்காவில் மொத்தம் 6.27 மில்லியன் நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 188,940க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். எனினும் அதிக நோய்த்தொற்றாளர்களுடன் இரண்டாவது இடத்தில் இருந்த பிரேசிலை பின்தள்ளி இந்தியா அந்த இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் மொத்தம் 4.2 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 71,642 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 447 பேர் உயிரிழந்த நிலையில் கொவிட்–19 தொற்றினால் பலியானோர் எண்ணிக்கை 126,650 ஆக அதிகரித்துள்ளது. எனினும் அந்நாட்டில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு கடற்கரைகள் மற்றும் பொது இடங்களில் மக்கள் ஒன்றுகூடி வருகின்றனர்.

பிரேசிலில் நோய்த் தொற்று சம்பவங்கள் 4,137,521 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tue, 09/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை