24 மணித்தியாலங்களில் 53 பேர் புதிதாக இனங்காணல்

கொரோனா வைரஸ் தொற்று:

 

கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்று நோயா ளிகள் 53 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளமை பாரதூரமாக சிந்திக்க வேண்டிய ஒன்று என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் புதிதாக 22 வைரஸ் தொற்று நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ள நிலையில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் 53 பேர் புதிதாக  இனங்காணப்பட்டுள்ளதாகவும்அவர்கள் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் முதலாம் திகதிக்கு பின்னர் நாட்டில் சமூகத்திலிருந்து வைரஸ் தொற்று நோயாளர்கள் இனம் காணப்படவில்லை என குறிப்பிட்ட அவர்,இந்த நிலையை தொடர்ந்தும் பாதுகாத்துக் கொள்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் தங்கி யுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவது தவிர்க்க முடியாதது.

எனினும் அது தொடர்பில் விசேட, தெளிவான வேலைத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுவது அவசியம்.

ஒரு விமானத்தில் 200 அல்லது 300 பேர் அழைத்து வரப்படுகின்றனர். அதனால் நோய்வைரஸ் தொற்று பரவும் நிலை அதிகரித்து காணப்படுகிறது. அதனை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.

வெளிநாடுகளில் தங்கி உள்ளவர்கள் மட்டுமன்றி நாட்டு மக்களும் அது தொடர்பில் தெளிவை ஏற்படுத்திக் கொள்வது அவசியம்.

எமது மக்கள் சில பிரதேசங்களில் நாட்டிலிருந்து கொரோனா வைரஸ் முற்றாக ஒழிக்கப்பட்டு விட்டதாக நினைத்துக் கொண்டு செயற்படுகின்றனர். சமூகத்திலிருந்து வைரஸ் தொற்று காணப்படாவிட்டாலும் அது தொடர்பில் நாம் அவதானத்துடன் செயற்படுவது முக்கியமாகும்.

பெரும் அர்ப்பணிப்புக்கு மத்தியில் நாம் தக்கவைத்துக் கொண்டுள்ள இந்த நிலைமையை தொடர்ந்தும் பாதுகாப்பது அவசியம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 09/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை