20ஆவது திருத்தச் சட்டம் குறித்து சஜித் பிரேமதாசவின் நிலைப்பாடு!

அரசியலமைப்பால் ஜனாதிபதியையும், பிரதமரையும் பலவீனப்படுத்தக் கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வலியுறுத்தியும் இன்று நடைபெறவிருக்கும் ஹர்த்தாலில் அனைத்து தமிழ், முஸ்லிம் மக்களையும் கலந்து கொள்ளுமாறு வேண்டி தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப்பேச்சாளர் சுரேஸ் பிரேமச் சந்திரன் பத்திரிகைகளுக்கு விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.

“தமிழ் மக்களின் விடுதலைக்காக லட்சக்கணக்கான பொதுமக்களும் பல்லாயிரக்கணக்கான போராளிகளும் தமது இன்னுயிரை தியாகம் செய்துள்ளார்கள். அவர்களுக்கான அஞ்சலி செலுத்துவதும் அவர்களை கௌரவப்படுத்துவதும், அவர்களை நினைவு கூருவதும் ஒவ்வொரு தமிழனதும் கடமையாகும். இந்த அஞ்சலி என்பது ஐ.நா சாசனத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டதும் சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு செயற்பாடுமாகும். இலங்கையைப் பொறுத்தவரையில் இந்த அஞ்சலி நிகழ்வுகளை கடைப்பிடிப்பது என்பது ஒரு போராட்டமாகவே மாறிவருகின்றது. எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் அந்த அரசாங்கம் அதனை தடை செய்வதும் நீதிமன்றங்களின் ஊடாக தடைகளைப் பெற்றுக் கொள்வதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இந்த வருடமும் உரிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த அஞ்சலி நிகழ்வுகளுக்கு எதிராக தடைகளைப் பெற்று வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் அஞ்சலி நிகழ்வுகளில் பங்கு கொள்ளக் கூடாது என்ற ஒரு நிலையை இந்த அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கட்சிகள் இந்த அஞ்சலி நிகழ்வுகளை நடாத்த முற்பட்டபொழுது ஒவ்வொரு இடத்திலும் அதற்கு எதிரான தடைகளை பொலிஸார் நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக் கொண்டனர். ஆனால், அரசாங்கத்தினுடைய இந்த அடக்கு முறைகளைக் கண்டித்தும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் நோக்கத்துடனும் கடந்த சனிக்கிழமை சாவகச்சேரியில் உண்ணாவிரதத்தை வெற்றிகரமாக நடாத்தி முடித்தோம். இராணுவ, பொலிஸ் சுற்றிவளைப்புக்குள் இந்த போராட்டம் நடைபெற்றது.

Mon, 09/28/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை