அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம்; நகல் வடிவம் இன்று அமைச்சரவையில்

அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிக்கிறார்

20ஆவது திருத்தத்தின் நகல்வடிவம் இன்று அமைச்சரவையில் சமர்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை, மூன்றில் இரண்டு பெரும்பான்மை போதும் என தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக 20ஆவது திருத்தம் சில வாரங்களில் நிறைவேற்றப்பட்டு விடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  புதிய திருத்தங்கள் நாட்டின் முதல் பிரஜையின் அதிகாரங்களை வலுப்படுத்தும், பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியை வலுப்படுத்தும் என ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாங்கள் ஜனாதிபதியின் பதவிக்காலத்தையோ அல்லது தற்போதைய அரசாங்கத்தின் பதவிக்காலத்தையோ நீடிப்பதற்கு ஒரு போதும் முயலமாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய திருத்தங்கள் மூலம் சுயாதீன ஆணைக்குழுக்களை நீக்கப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Wed, 09/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை