2024இல் நிலவுக்கு திரும்ப நாசா திட்டம்

2024ஆம் ஆண்டில் மீண்டும் நிலவுக்குத் திரும்பும் 28 பில்லியன் டொலர் திட்டத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா வெளியிட்டுள்ளது.

ஆர்டெமிஸ் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தத் திட்டத்தின் ஓர் அங்கமாக ஓர் ஆண் மற்றும் பெண்ணை நிலவுக்கு அனுப்பவுள்ளது. 1972 ஆம் ஆண்டுக்குப் பின் நிலவில் மனிதன் கால் பதிக்கும் முதல் நிகழ்வாக இது அமையவுள்ளது.

எனினும் நிலவுக்குச் செல்வதற்கான அமைப்பை நிர்மாணிப்பதற்கு கொங்கிரஸ் 3.2 பில்லியன் டொலர் நிதியை விடுவிப்பதைப் பொறுத்தே இந்த திட்டத்தின் கால எல்லையை நிர்ணயிக்க முடியுமாக அமையும்.

இதில் அப்பலோ போன்ற ஓரியோன் என்ற விண்கலத்தில் எஸ்.எல்.எஸ் என்ற சக்திவாய்ந்த ரொக்கெட் மூலமே விண்வெளி வீரர்கள் பயணிக்கவுள்ளனர்.

நிலவில் நீண்ட ஆய்வு ஒன்றை மேற்கொள்வதற்கு தேவையான உட்கட்டமைப்புகளுடன் மனிதர்களுக்கான முகாம் ஒன்றை இந்த தசாப்தத்தின் இறுதியில் நிலவில் உருவாக்குவாதற்கு நாசா திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Wed, 09/23/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை