உலக சுற்றுலா தினம் 2020 கண்டியில்

World Tourism Day 2020-at Kandy City Center-September 25-27

தொனிப்பொருள் 'சுற்றுலா மற்றும் கிராமிய அபிவிருத்தி'

2020 உலக சுற்றுலா தினம் எதிர்வரும் செப்டெம்பர் 25 முதல் 27 வரை கண்டியில் கொண்டாடப்படவுள்ளது.

'சுற்றுலா மற்றும் கிராமிய அபிவிருத்தி' எனும் தொனிப்பொருளின் கீழ் இம்முறை சுற்றுலா தினம் கொண்டாடப்படுகின்றது.

சுற்றுலா தின உத்தியோகபூர்வ விழா, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோரின் தலைமைத்துவத்தின் கீழ், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன், எதிர்வரும் செப்டெம்பர் 27ஆம் திகதி காலை 9.00 மணிக்கு, கண்டி சென்டரில்,  இடம்பெறவுள்ளது.

சுற்றுலா அமைச்சின் வழிகாட்டலின் கீழ், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை, மத்திய மாகாண சபையின் வர்த்தக மற்றும் சுற்றுலா திணைக்களம் ஆகியன இணைந்து, மூன்று நாள் விசேட நிகழ்ச்சிகளைக் கொண்டதாக, 2020 உலக சுற்றுலா தினத்தை கண்டியில் ஏற்பாடு செய்துள்ளன.

நிலைபேறான, பொறுப்பு மிக்க, உலகளாவிய ரீதியில் அடையக்கூடிய சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில், ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பினால் (UNWTO) உலக சுற்றுலா தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் 27ஆம் திகதி உலகளவில் கொண்டாடப்படுகிறது.

இவ்வாண்டு, 'சுற்றுலா மற்றும் கிராமிய அபிவிருத்தி' எனும் கருப்பொருளின் கீழ் கொண்டாடப்படும் உலக சுற்றுலா தினம், நீண்டகால பொருளாதார வளர்ச்சியை அடையும் வகையில், மக்களை மையமாகக் கொண்ட, தொழில்நுட்பத்தால் இயங்குகின்ற, நிலைபேறான சுற்றுலாத் துறையை அடிமட்டத்திலிருந்து வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது.

மிகக் குறைந்த பொருளாதார வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கு சுற்றுலாத் துறையானது ஒரு முக்கிய உந்து சக்தியாகும். இது இளைஞர்கள், பெண்கள், சிறுபான்மையினர், பழங்குடி மக்கள் மற்றும் பிற ஒதுக்கப்பட்ட குழுக்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான ஊக்கியாகவும், கிராமப்புறங்களில் உட்கட்டமைப்பு, பொதுச் சேவை வளர்ச்சியின் தூண்டுதலாகவும் செயல்படுகிறது.

எனவே, இந்த ஆண்டின் உலக சுற்றுலா தினமானது, சிறிய முதல் நடுத்தர கைத்தொழில்களின் திறன்களை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதன் மூலம், 2020-2022 இல் சுற்றுலா மூலோபாய செயல் திட்டத்தின் முக்கிய விதிகளை இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சமூக அடிப்படையிலான சுற்றுலா தயாரிப்புகளை மேம்படுத்தவும், சுற்றுலா தயாரிப்புகளின் மூலோபாய சந்தைப்படுத்தலை மேம்படுத்தவும், சுற்றுலா அடிப்படையிலான, இத்தகைய முயற்சிகள் கிராமப்புற தொழில்கள் மற்றும் சமூகங்களை சுற்றுலா அடிப்படையிலான முக்கிய சந்தைகளில் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்த ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Mon, 09/21/2020 - 17:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை