காட்டுத் தீக்கு மத்தியில் சிக்கிய 200 பேர் மீட்பு

அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் வேகமாக பரவும் காட்டுத் தீக்கு மத்தியில் சிக்கிய 200க்கும் அதிகமானோர் வான் வழியாக காப்பாற்றப்பட்டுள்ளனர்.

சியர்ரே தேசிய பூங்காவில் உள்ள நீர்த்தேக்கத்தில் இவர்கள் தரை வழியாக தப்ப முடியாத வகையில் நாலா பக்கமும் தீ சூழ்ந்த நிலையிலேயே கடந்த ஞாயிற்றுக்கிழமை இராணுவ ஹெலிகொப்டர்கள் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்தக் காட்டுத் தீ வேகமாக நகர்ந்து வந்த நிலையில் ஒரு தருணத்தில் அங்கிருந்தவர்களுக்கு நீர்த் தேக்கத்தில் அடைக்கலம் பெறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதில் வெளியேற்றப்பட்டவர்களில் இருபது பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லபட்டிருப்பதோடு இருவர் கடும் காயத்திற்கு உள்ளாகி இருப்பதாக தீயணைப்புத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கலிபோர்னியாவில் சாதனை அளவுக்கு வெப்பநிலை உச்சம் பெற்றிருப்பதோடு அது காட்டுத் தீ சம்பவங்களை அதிகரித்துள்ளது. கடந்த மூன்று வாரங்களில் சுமார் 600,000 ஹெக்டேர் பகுதி தீயில் கருகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tue, 09/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை